தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை, மீண்டும் நடத்திக்காட்டுவோம் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி..!

399

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை, மீண்டும் நடத்திக்காட்டுவோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
கரூரை அடுத்த வேலுச்சாமிபுரத்தில் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு குதிரை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேவல் சண்டை நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் கத்தியின்றி சேவல் சண்டையை மீண்டும் நடத்துவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரவக்குறிச்சியை அடுத்துள்ள பூலாம்வாசு பகுதியில் அடுத்த ஆண்டுக்குள் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை மீண்டும் நடத்தப்படும் என உறுதியளித்தார்.