75 லட்சம் வீடுகளுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ்கள் !

327

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 75 லட்சம் வீடுகளுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்படவுள்ளன
தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் அனலாக் என்ற தொழில்நுட்ப முறையில் சேவையை வழங்கி வருகிறது. இதன்மூலம்,70 ரூபாய் கட்டணத்தில் 100 சேனல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெரு நகரங்களில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்பவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் 75 லட்சம் வீடுகளுக்கு இலவசமாக செட் டாப் பாக்ஸ்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் இறுதி செய்யும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.