செர்பியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

1207

செர்பியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
செர்பியாவில் உலக குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் சுமித்சங் வான், நிகத்சரீன், ஹிமான் ஷீசர்மா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
91 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சுமித்சங் வான், ஈக்வடாரின் காஸ்டிலோ டோரெர்சை 5 -க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தார்.
இதேபோல, 51 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நிகத்சரீன், கிரீஸின் ஐ காட்டேரிணியையும், 49 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் ஹிமான் ஷீசர்மா, அல்ஜீரியாவின் முகமது டௌராசையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.