தினகரனை அனுசரித்து போனால் மட்டுமே அதிமுக தொடர்ந்து நீடிக்க முடியும் : நடிகர் செந்தில்

353

தினகரனை அனுசரித்து போனால் மட்டுமே அதிமுக தொடர்ந்து நீடிக்க முடியும் என்று, அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் நடிகர் செந்தில் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் தினகரனை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் சகுனிகள் இருப்பதாக குற்றம்சாட்டினார். தினகரனை ஒதுக்க இவர்களே காரணம் என்று விமர்சித்த செந்தில், ஆட்சியில் இருப்பவர்களுக்கு கட்சி முக்கியம் கிடையாது என்று கண்டனம் தெரிவித்தார். பணமும், பதவியும் மட்டுமே அவர்களுக்கு அவசியம் என்று விமர்சித்த அவர், எடப்பாடியை முதல்வராக்கியது சசிகலா என்று தெரிவித்தார்.