1,932 ஆசிரியர் காலிப்பணியிடகள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

311

மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காக, 500 அரசுப்பள்ளிகளில் அடல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில், சாம்பள்ளி மால்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இருபது லட்ச ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் பரிசோதனை மையத்தை திற்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலியாக ஆயிரத்து 932 ஆசிரியர் பணியிடங்களுக்கு டி,ஆர், பி தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்தபின், முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். பகுதி நேர ஆசிரியர்களை 7 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்து கொள்ள, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.