அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்

217

வரும் காலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை, தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை என்று கூறினார். பெற்றோர்களின் கல்வி கட்டண சுமையை குறைக்க மத்திய அரசிடம் இருந்து 200 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார்.