செங்குன்றம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 17பேரை வருவாய்துறையினர் மீட்டனர்.

487

செங்குன்றம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 17பேரை வருவாய்துறையினர் மீட்டனர்.
செங்குன்றம் அடுத்த வடகரையில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நெற்களம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாதவரம் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 குடும்பங்கள் 8 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 17பேர் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.