வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

256

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை மாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்று கூறிய அவர், எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.