1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

308

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.