கோபிசெட்டிப்பாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.

234

கோபிசெட்டிப்பாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே தூக்கநாயக்கன் பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்கென தமிழக அரசு, எட்டு கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். மேலும் கோபிசெட்டிப்பாளையத்திற்குட்பட்ட அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும் எனவும், தரைப்பாலங்களை உயர்த்தி உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், வருவாய் துறை அதிகாரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.