செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

233

செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருப்பதியை அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 4ம் தேதி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். செம்மரங்களை வெட்ட அவர்கள் வந்ததாக ஆந்திர அரசு குற்றம்சாட்டியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் இரண்டு பேரை நியமித்துள்ளது. இந்தநிலையில், திருப்பதி 5வது நீதிமன்றத்தில் 32 தமிழர்களின் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சித்தூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.