மாவட்ட ஆட்சியர் கார் எண்ணை பயன்படுத்தி செம்மரம் கடத்தல் ..!

343

திருப்பதி அருகே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டை பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, போலீசாரை கண்டதும் வேகமாக சென்ற காரை போலீசார் விரட்டிச் சென்றனர். இதையடுத்து, காரை நடு ரோட்டில் விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். காரை சோதனை செய்த போலீசார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் கார் எண்னை போலியாக பொருத்தி செம்மரங்களை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.