செம்மரம் கடத்திய 20 தமிழர்கள் உள்பட 21 பேர் கைது !

471

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து அடிக்கடி செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுவதால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் .இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவை அடுத்த லங்கமல்லா வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்கள் உட்பட 21 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகும். கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக கூறி தமிழர்கள் பலரை ஆந்திரமாநில போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது