செம்மரங்களை வெட்ட சென்றதாக கூறி ஆந்திராவில் தமிழர்கள் 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

263

செம்மரங்களை வெட்ட சென்றதாக கூறி ஆந்திராவில் தமிழர்கள் 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து ரேணி குண்டா சென்ற ரயிலில் நேற்று மாலை ஆந்திர மாநில போலீசார் சோதனை நடத்தினர். ரயிலில் பயணித்த தமிழர்கள் 32 பேரை கைது செய்த அவர்கள், செம்மரங்களை வெட்ட ஆந்திராவுக்கு அவர்கள்
வந்ததாக குற்றம் சாட்டியுள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
32 பேர் மீதும் 6 பிரிவுகளில் ஆந்திர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இவர்கள் சென்னை வழியாக ரேணிகுண்டாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.