முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தாயார் மரணம் ஜெயலலிதா இரங்கல்

164

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் தாயார் ந.ரங்கம்மாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் செல்வராஜீக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
மேற்கண்டவாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது