திமுக தலைவர் கருணாநிதி நீடூழி வாழ வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு

350

திமுக தலைவர் கருணாநிதி நீடூழி வாழ்ந்து, 2021 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை பார்க்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு கானல் நீராகிப்போகும் என்றார். தற்போது சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அதிமுக வினரின் விருப்பம் என அவர் கூறினார். இந்த சூழலில் திமுக வினரை விமர்சித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த அவர், கருணாநிதி நீடூழி வாழ்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதை பார்க்க வேண்டும் என்றார்.