மதுரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

292

மதுரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர்கள் மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள மாடக்குளம் கண்மாயை சுற்றி இருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில், ஆற்றின் குறுக்கே புதிதாக, 4 தடுப்பனைகள் கட்டப்பட இருப்பதாக தெரிவித்தார்.