60 வயது வரை திமுக இளைஞரணி தலைவராக இருந்தவர் ஸ்டாலின் – அமைச்சர் செல்லூர் ராஜூ

412

60 வயது வரை திமுக இளைஞரணி தலைவராக இருந்தவர் மு.க.ஸ்டாலின் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்…

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதா சொன்னதை போல் அதிமுக 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்றார். அதிமுக சாமானியர்களுக்கும் அடையாளம் தரும் கட்சி என கூறிய அவர், 60 வயது வரை திமுக இளைஞரணி தலைவராக இருந்தவர் மு.க.ஸ்டாலின் என விமர்சித்துள்ளார். மேலும் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி என எந்த வகை தேர்தலாக இருந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்..