கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் என்பதே அதிமுகவின் எண்ணம் : அமைச்சர் செல்லூர் ராஜூ

227

கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் என்பதே அதிமுகவின் எண்ணம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் கருணாநிதி ஒரு அரசியல் சானக்கியர் என்று புகழாரம் சூட்டினார். எழுத்திலும் பேச்சிலும் கதை வசனத்திலும் தனக்கென தனி முத்திரை படைத்தவர் என சுட்டிக் காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் என்பதே அதிமுகவின் எண்ணம் என்று சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மக்கள் மட்டும் சுபிட்சமாக இல்லாமல் கடல்வாழ் உயிரினங்களும் சுபிட்சமாக இருப்பதாக தெரிவித்தார்.