கூட்டுறவு துறை முறைகேட்டில் ஈடுபட்ட 52 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜீ

234

கூட்டுறவு துறையில் முறைகேடுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தென்றல் நகரில், 63-வது கூட்டுறவு வங்கி கிளையை அவர் திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, கூட்டுறவு வங்கியில் வரலாறு காணாத வகையில், 27 ஆயிரத்து 750 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூட்டுறவு துறையில் முறைகேடுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.