மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அதிமுகவில் இணைய வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு

572

மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து குறைகளை சுட்டிக் காட்டினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவுக்கு வருவார்கள் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.