ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருநாளும் பலிக்காது : அமைச்சர் செல்லூர் ராஜு

336

ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருநாளும் பலிக்காது என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் விழிப்புணர்வு தூய்மை பணியினை அவர் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜு, சிவாஜி சிலை திறப்பில் திமுகவினர் அரசியல் செய்வதாக விமர்சித்தார். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து விட்டதால், ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.