ஊடகங்கள் தமிழக அரசை குறை சொல்வதில் மட்டுமே குறியாக இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ..!

327

ஊடகங்கள் தமிழக அரசை குறை சொல்வதில் மட்டுமே குறியாக இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சில நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊடகங்கள் தமிழக அரசை குறை சொல்வதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகள், அரசின் மீது குறை சொல்வதை மட்டுமே ஊடங்கள் அதிகம் வெளியிடுவதாக கூறிய அவர், அரசு செய்யும் நல்ல திட்டங்களை ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.