கூட்டுறவுதுறை மூலம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு..!

339

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம், வடசென்னை மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் கூட்டுறவுத்துறைகளின் சார்பில் உருளைக்கிழங்கு, வெங்காயம், அரிசி, துவரம்பருப்பு, படுக்கை விரிப்புகள், நாப்கின்கள், லுங்கிகள், நைட்டிகள், சேமியா பாக்கெட்டுகள்.போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டக் கூட்டுறவுத்துறைகள் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு நேரடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.