திமுகவினர் எத்தனை கோவில் குளங்களை சுற்றினாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்…

மதுரையில் காவிரி நதி நீர் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக கட்சியையும் ஆட்சியையும் எவனாலும் அழிக்க முடியாது என்றும், திமுகவினர் எத்தனை கோவில் குளங்களை சுற்றினாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 1974ஆம் ஆண்டிலேயே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய காவிரி கருணாநிதியின் ஊழலால் தடைப்பட்டதாக கூறினார். மேலும் அதிமுகவின் ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.