ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

307

ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை எனவும், இரண்டு பக்கமும் கால் வைத்து தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் முண்டக கன்னி அம்மன் கோயில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களுடன் உணவு அருந்தினார். பின்னர் அ.தி.மு.க. குறித்த, ரஜினிகாந்த்தின் கருத்துக்கு பதிலளித்த அவர்,நிதானமாக பேசும் ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை எனவும் இரண்டு பக்கமும் கால் வைத்து தொண்டர்களை ஈர்க்கப்பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.