ஐதராபாத்தில் ரெயில் முன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு..!

705

ஐதராபாத்தில் ரெயில் வரும் போது, செல்பி எடுக்க முயன்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிவா என்ற இளைஞர் ரயில் முன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது பின்னால் விரைவாக வந்த ரெயிலை பார்த்தும் ஆபத்தை உணராமல் சற்றும் அசராமல் தண்டாவளத்தில் முன் நின்று செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து ரெயில் அவர் மீது வேகமாக மோதியது. இதில் தலையில்பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.