நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் – அக்கட்சித் தலைவர் சரத்குமார்

179

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமத்துவ மக்கள் கட்சியின் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் நரேந்திர மோடி பதவி ஆசை வந்ததும் தமிழகம் வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.