17 கிராமங்களில் பல ஆண்டு காலமாக தார் சாலை இல்லை | மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

100

சாலை அமைக்கக் கோரி 17 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மாரமங்களம் பஞ்சாயத்தில் உள்ள 17 கிராமங்களில் பல ஆண்டு காலமாக தார் சாலை இல்லாமல் மண் சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட 17 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியரிடம், தார் சாலை அமைக்கக் கோரி 23 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், வரும் 13ஆம் தேதிக்குள் சாலைப் பணிகள் தொடங்காவிட்டால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.