மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு தமிழக அரசே காரணம் – முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்

167

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராததே மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு காரணம் என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் இணைப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது அம்மா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவில்லை. அதன் எதிரொலியாக பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் தங்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.