தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை..!

95

சேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபாத் சிவஞான தேர்வு என்ற பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சதிஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தடைச் செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 17 நபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 850 லாட்டரி சீட்டுகள், 28 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய குற்றாளியான சதிஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.