காவிரியாற்றில் தண்ணீர் பருக வந்த 3 காட்டு யானைகள்..!

229

காவிரியில் குடிநீர் தேடி வந்த 3 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு, வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அருகே பாலமலை, கத்திரிமலை உள்ளிட்ட மலைகள் உள்ளன. அங்குள்ள வனப்பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள், தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால், குடிநீரை தேடி மலை கிராமங்களுக்குள் வனவிலங்குகள் நடமாடுகின்றன. செட்டியூர் என்ற பகுதிக்குள் அமைந்துள்ள காவிரியாற்றில், குடிநீர் தேடி 3 யானைகள் வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையனர் அங்கு வந்து, யானைகளை விரட்டினர். அருகில் உள்ள கர்நாடக வனப்பகுதிக்குள் அந்த யானைகள் விரட்டியடிக்கப்பட்டன.