அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை |மாவட்ட ஆட்சியர் ரோகிணி

84

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் தொழில் தொடங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.