ஆடி மாத பிறப்பை வரவேற்கும் பாரம்பரிய விழா | தேங்காய்களை தீயில் சுட்டு மக்கள் உற்சாக கொண்டாட்டம்

245

ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக சேலத்தில் நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகையில் ஏராளாமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஆடி மாத பிறப்பையொட்டி, சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த பாரம்பரிய விழா,நடப்பாண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் அரிசிப்பாளையம், கிச்சிப்பாளையம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பண்டிகையை மக்கள் தங்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தேங்காய் சுட்ட பிறகு, அதனை கோயில்களில் வைத்து வழிபடும் மக்கள், தொடர்ந்து தேங்காயில் உள்ள கலவை உணவை உண்டு மகிழ்வர்.