சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் 182 நபர்களுக்கு பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது..!

89

எடப்பாடியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் 182 நபர்களுக்கு பழகுனர் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கிராமத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது… சேலம் மாவட்ட போக்குவரத்து துணை ஆணையர் சத்திய நாராயணன் இந்த முகாமிற்கு தலைமை தாங்கினார்… இதில் பங்கேற்ற அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகள் பற்றிய கையேடு வழங்கப்பட்டது… மேலும் ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்பித்த 182 பேருக்கு பழகுனர் ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டது.