ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு | 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

114

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சேனைக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களுடன் வந்த வசந்தா, மாதம்மாள் என்ற 2 பெண்கள் திடீரென பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி செய்த நபர் மீதுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.