100% வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

86

நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஆயிரத்து 661 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.