கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து | ரூ.5 லட்சம் மதிப்பிலான கரும்புகள் சேதம்

129

சேலம் அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கரில் விளைந்த 5 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமாகின.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த முத்து மற்றும் குமார் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டிருந்து. இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் .இந்த விபத்தில் தோட்டத்தில் பயிடப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமாகின. இச்சம்பவம்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.