மேட்டூர் அணையில் அணைகள் பாதுகாப்புக் குழு ஆய்வு..!

93

சேலம் மேட்டூர் அணையை அணைகள் பாதுகாப்புக் குழு இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சேலம் மேட்டூர் அணை 120 அடிகள் உயரமும் ஆயிரத்து 700 மீட்டர் நீளமும் கொண்டது. 93 புள்ளி 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் உறுதித்தன்மையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில், அணையில் உள்ள மதகுகளையும், கதவணைகளையும் அணைகள் பாதுகாப்புத்துறை இயக்குநர் சுந்தர்ராமன் தலைமையிலான அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர்.இதில் அணை உறுதித்தன்மையுடன் பாதுகாப்பாக உள்ளதென்றும் சிறு சிறு பராமரிப்புப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.