நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் | மாவட்ட ஆட்சியர் ரோகிணி

97

நாடாளுமன்ற தேர்தலுக்காக, சேலம் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் விதிமுறை மீறல்களை தடுக்க, 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்புக்குழுக்கள், 33 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக ஒரு செலவின அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும் என்று கூறிய ஆட்சியர் ரோகிணி, மாவட்டத்தில் 212 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.