புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொடுத்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரம்….

215

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு நெருங்கிய கொல்கத்தா தொழிலதிபர் பரஸ் மால் லோதா வீட்டில், சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது தொடர்பாக சேகர் ரெட்டிக்கு வேண்டப்பட்ட கோல்கட்டா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை போலீசார் கைது செய்தனர். பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அவர் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் கண்கானிப்பில் உள்ளார். தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கொல்கத்தா மற்றும் டில்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணினி சாதனங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், லோதாவுக்கு வேண்டப்பட்ட பெண் ஒருவரின் சுவிஸ் வங்கிக்கணக்கு ஆவணமும் பறிமுதல் செய்யப்பட்டது. லோதா தொடர்புடைய சிலருக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.