தாய்லாந்து பிரதமருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!

486

இந்தியா – தாய்லாந்து இடையில் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராணுவ அமைச்சக உயர் மட்டக்குழு அரசு முறைப்பயணமாக தாய்லாந்து சென்றுள்ளது. இந்த நிலையில், தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சாவை பாங்காக் நகரில் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இதேபோல் அந்நாட்டின் துணை பிரதமர் பிராவித் வோங்சுவானையும் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகள் இடையேயு ராணுவ ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்ததாக பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.