கடந்த தேர்தலின்போது பாஜக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?

99

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாஜகவை விரட்டியடிப்போம் என முத்தரசன் தெரிவித்தார்.

சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி வெளிநாட்டில் இருந்த கருப்புப் பணம் மீட்கப்பட்டதா எனவும், ஒவ்வொரு நபரின் பெயரிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என சொல்லிய பாஜக அதை நிறைவேற்றியதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியாவில் உள்ள கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் வெளியேற வேண்டுமென்று சொன்ன பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.