சீர்காழி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்

281

சீர்காழி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ஜீவா. இவரது நண்பர் தினேஷ் அதே பகுதியில் விளக்கு விற்பனை செய்து வந்தார். இவர்கள் இருவரும் சீர்காழி சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். மேலசெங்கமேடு அருகே எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து, இவர்களின் வண்டி மீது மோதியது. இதில் பேருந்தின் டயரில் சிக்கி இரண்டு பேரும் பரிதாபதமாக உயிரிழந்தனர். இதை பார்த்த அப்பகுதியினர் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.