சினிமாவை பைனான்சியர்கள் இயக்குகின்றனர்-இயக்குனர் சீனு ராமசாமி !

492

70 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பைனான்சியர்கள்தான் இயக்கி வருவதாக இயக்குனர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி
மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அவர் அன்புசெழியனின் ஜாதியை சேர்ந்தவர் இல்லை என்றும், வட்டிக்கு வாங்கி படம் எடுப்பது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 70 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பைனான்சியர்கள்தான் இயக்கி வருவதாக தெரிவித்துள்ள அவர், அன்பு செழியனை ஒரு முறை மட்டுமே சந்தித்து பேசியுள்ளதாகவும் அதற்கு மேல் அவரை தெரியாது எனவும் கூறியுள்ளார்.