எண்ணூர் துறைமுகத்தை கமல்ஹாசன் பார்வையிட்ட செயல் வரவேற்பதாக சீமான் கருத்து …!

513

எண்ணூர் துறைமுகத்தை கமல்ஹாசன் பார்வையிட்ட செயல் வரவேற்தக்கது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் இடையிலான மோதல் நாகரீகமற்ற அரசியலை வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பன்னாட்டு முதலாளிகளின் லாபத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். எண்ணூர் துறைமுகத்தை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டததை வரவேற்பதாகவும் சீமான் கூறினார்.