கள்ளி செடி கூட வளரும் ஆனால் தமிழகத்தில் பாஜக வளராது : சீமான் விமர்சனம் ..!

493

கள்ளி செடி கூட வளரும் ஆனால் தமிழகத்தில் பாஜக வளராது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நினைவு பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதில் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கின்றனர். இதுதான் தேசிய கட்சியின் நிலையா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் கள்ளி செடி கூட வளரும் ஆனால் பாஜக வளராது என்று விமர்சனம் செய்தார்.