மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!

304

சேலம் அருகே கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின்கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக, சேலத்தை அடுத்த கூமாங்காடு என்ற இடத்தில் கிராம மக்கள் கருத்துக்களை கேட்ட சீமான் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் பத்து நபர்களும் கைது செய்யப்பட்டனர். இதில், 2 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சீமான் உள்ளிட்ட 9 பேரும், 3 பிரிவுகளின்கீழ் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, சீமான் உள்ளிட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.