பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

166

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்க, தமிழக அரசு காலதாமதமின்றி சட்டசபையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். அரசுக்கு அழுத்தம் தரவே குட்கா சோதனை நடைபெறுவதாக கூறிய அவர், அழகிரி நடத்திய பேரணியால் திமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறிய சீமான், திரைப்படத்தை தானே இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.