கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்? கமல்ஹாசனுக்கு சீமான் கேள்வி

376

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியின் போது, ஊழலுக்கு எதிராக நடிகர் கமல் ஏன் குரல் கொடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அ.தி.மு.க வும். தி.மு.கவும் தான் ஊழலை புகுத்தியதாக குற்றம்சாட்டினார். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது, நடிகர் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினர். ஊழலை அறிமுகப்படுத்திய தி.மு.கவுக்கு எதிராக கருத்து தெரிவிக்காதது ஏன் என்றும் சீமான் வினவினார்.